ஹிட் ரன் சட்டத்தை திரும்ப பெற கோரி தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஓட்டுனர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம்.

ஹிட் ரன் சட்டத்தை திரும்ப பெற கோரி தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஓட்டுனர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம். தேனி மாவட்டம் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி முன்பு தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் காலவரையற்ற நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தேனி மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குன்னூர் சுங்கச்சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் மரித்து மத்திய அரசு கொண்டுவந்த ஹிட் & ரன் சட்டத்தை தடை செய்யக்கோரி துண்டு பிரசுரங்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழங்கப்பட்டது இது தொடர்ந்து வரும் வாகனங்களுக்கு முன்புறம் பின்புறம் பகுதியில் இந்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 7 லட்சம் ரூபாய் அபதாரம் விதித்து இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தேனி மாவட்டத்தில் உள்ள வாகன ஓட்டிகள் 200க்கும் மேற்பட்டோர் குன்னூர் சுங்கச்சாவடி முன்பு வரும் அனைத்து வாகனத்திற்கும் துண்டு பிரசவங்கள் வழங்கப்பட்டு அவருடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் தேனி மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.