ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு முன்பாக 1985 ஆம் ஆண்டு ஒன்றாக 10 ஆம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு முன்பாக 1985 ஆம் ஆண்டு ஒன்றாக 10 ஆம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மூன்று மாதங்களுக்கு முன்பு வாட்சப் குழுக்கள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவெடுத்திருப்பதாக தெரிவித்த பழைய மாணவர்கள் முதற்கட்டமாக பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்க குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கியுள்ளனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பாக 1984 மற்றும் 85 ஆம் ஆண்டு பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று மீண்டும் தங்களது பள்ளியில் சந்தித்தனர் பழைய மாணவர்கள் 39 பேரும் தங்களது மனைவி குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கூட்டமாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நினைத்து பெருமிதம் தெரிவித்த முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைவு பரிசுகளை வழங்கி மறக்காமல் இருக்க பதிவுகளை செய்து கொண்டதோடு சினிமா பாடல்கள் பாடியும், கவிதைகள் சொல்லியும், கூடி நின்று பழைய மாணவர்களோடு குடும்பத்தோடு பேசி மகிழ்ந்தும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழு மூலம் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக தெரிவித்த பழைய மாணவர்கள் இது மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர் மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் உதவும் விதமாக முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் வைக்கப்பட உதவியுள்ளதாகவும் தொடர்ந்து குழுவாக செயல்பட்டு பள்ளிக்கு பல நன்மைகள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர் 38 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்லாது பார்ப்பவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சி சம்பவமாக இருந்தது.