ஜாதி வாரி கணக்கெடுப்பு இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் ஆவேசம்!

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை தென் மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அரசு கள்ளர் பள்ளியை பெயர் மாற்றம் செய்வதை உயிரை கொடுத்தாவது தடுப்போம் என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் ஆவேசம்! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி கல்லுப்பட்டியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளர் கதிரவன் கூறுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் 10.5 சதவீதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு எங்கள் உரிமை அதை ஒரு காலமும் விட்டுத் தர மாட்டோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை இதை தென் மாவட்ட மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். செந்தில் பாலாஜி குற்றவாளி என நீதிமன்றம் அவரை தண்டிக்கப்படவில்லை எனவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதில் தவறில்லை. தமிழகத்தில் பல ஜாதிகளின் பெயரில் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஏன் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளி பெயரை மட்டும் மாற்ற வேண்டும் என முன்னாள் நீதிபதி சந்துரு கூறுகிறார். அரசு கள்ளர் பள்ளியை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சி எங்கள் உயிர் இருக்கும் வரை நடக்க விடமாட்டோம் என தெரிவித்தார்.