மின் கட்டணம், சொத்து வரி உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து தேனியில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி நகராட்சி முன்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் நீண்ட வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சொத்து வரி உயர்வு மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அதிக அளவில் இருப்பதாகவும் அதை தடுக்க தவறிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக நகர செயலாளர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கம்பம் ஆண்டிப்பட்டி சின்னமனூர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன.