ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது கோயில் தான் ஆனால் இப்பொழுது ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை பெண்கள் ,மாணவ, மாணவிகள் கடந்து செல்ல அச்சம் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள் ஈரோடு சென்னிமலை அரச்சலூர் ரோடு எப்பொழுதும் பிஸியாக இருக்கும் பிரதான சாலையாகும் . குடியிருப்புகள், தொழில்சாலைகள், தறி குடோன் , கல்வி கூடங்கள் , வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால். இந்தச் சாலையில் 24 மணி நேரமும் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் சென்று வருவது வழக்கம். காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகம் அளவு செல்வார்கள். வாகன போக்குவரத்தும் அதிகப்படியாக இருக்கும் இந்த இடத்தில் தான் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இரண்டு அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது . சென்னிமலை அரசலூர் ரோட்டில் பொது மயானத்தை ஒட்டி உள்ள இந்த இரண்டு அரசு டாஸ்மாக் கடையில் உள்ள ஒப்பந்த பாரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் இரு மடங்கு விலையில் மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப கட்டிங் விற்கப்படுகிறது மதுபானக்கூடங்களில் மது பாட்டில்கள் தவிர கட்டிங் விற்கக் கூடாது என்பது விதிமுறையாகும். மேலும் சென்னி மலையில் குடிமகன்களுக்கு சாதகமாக இலவச தண்ணீர் ,டம்ளர், ஸ்னாக்ஸ் கூல்டிரிங்ஸ் என ராஜா உபசரணையுடன் குடிகாரர்களை தன்னிலை மறந்து அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து. குடும்பச் செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை முடிந்தளவு பறித்து விடுகிறார்கள். மது போதை தெளிந்தவுடன் பையில் பணம் இல்லாமல் தலையில் அடித்தும் அழும் காட்சியும் காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வந்து அதிக போதை தலைக்கேறி இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த குடிமகனின் நிலையும் பரிதாபமாக உள்ளது. குடியிருப்புக்கு அருகே அருகே மதுபான கடை இருப்பதால் அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொருட்கள் வாங்க செல்லம் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்அடைகிறார்கள். எந்த நேரமும் சரக்கு கிடைப்பதால் முழு நேர குடிகாரராக மாறுகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் சரக்கு அடித்து விட்டு அந்தப் பகுதியில் உள்ள கோவில், மரத்தின் அடியில், ரோட்டோரங்களில் ஹாயாக படுத்து உறங்க காட்சி காணப்படுகிறது. இந்தப் பகுதி பொது இடங்கள் குடிமகன்களின் கூடாரமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் விருப்பமாகும் . 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் பாருக்கு சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும். இளைய சமுதாய மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் நிரந்தரமாக இந்த இரண்டு மதுபான கடையை மூடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள பார்களில் சரக்கு விற்பனை செய்தால் உடனடியாக ஈரோடு மாவட்ட டாஸ்மார்க் மேலாளருக்கு டாஸ்மார்க் சூப்பர்வைசர் , சேல்ஸ்மேன்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படி தகவல் எதுவும் மாவட்ட மேலாளர்களுக்கு தெரிவிக்கவில்லை . அப்படி என்றால் இந்த சட்ட விரோதமான மது விற்பனைக்கு இவர்களும் உடைந்தை என்பது உறுதியாகி உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உடனடியாக இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்த நடவடிக்கையை பார்த்து மற்ற பணியாளர்களும் முறைப்படி தகவல் உடனடியாக தெரிவிப்பார்கள்.