விளாமரத்தூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் நகராட்சியின் திட்டத்திற்காக விளாமரத்தூர் பகுதியில் கள ஆய்வு செய்தார் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இரா.சா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து சாமன்னா வாட்டர் ஹவுஸ் என்ற பகுதியில் இருந்து குடி தண்ணீர் எடுக்கபட்டு சுத்திகரிப்பு செய்து நகராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதி கழிவுநீர் சுற்றியுள்ள தொழிற்சாலை கழிவு நீர் அதிக அளவில் பவானி ஆற்றில் கலப்பதால் பவானி ஆற்று தண்ணீரையே குடி தண்ணீராக எடுத்து விநியோகிப்பதால் தண்ணீர் எடுக்கும் இடத்தினை விளாமரத்தூர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் நீண்ட வருட காலமாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா விளாமரத்தூரில் பகுதியில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்தினை நேரில் கள ஆய்வு செய்தார் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆ.இராசா கூறியதாவது விளாமரத்தூரில் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் பொது மக்களுக்காக சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த மாண்புமிகு, தமிழக முதல்வர். மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்களுக்கும் மேட்டுப்பாளையம் பொதுமக்கள் சார்பாகவும் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேட்டுப்பாளையம் நகராட்சி பொதுமக்களின் நீண்ட வருட கோரிக்கையான விளாமரத்தூரில் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் பொது மக்களுக்காக சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யும் இந்த மகத்தான திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினார்.