ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அவல்பூந்துறையில் 78வது சுதந்திர விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அவல்பூந்துறையில் 78வது சுதந்திர விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது!
78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அவல்பூந்துறையில் 78வது சுதந்திர விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியச் செயலாளர்
திரு.சு குணசேகரன் அவா்களும் அவல்பூந்துறை பேரூராட்சி தலைவா் திருமதி .ராதாமணி பாலசுப்பிரமணியம் அவா்களும்
அரசு மேல் நிலைப்பள்ளி அவல்பூந்துறை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு R. பிரணவமர்மன் அவா்களும் அவல்பூந்துறை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
திரு. A பிரப் அவா்களும் மற்றும் பத்திரிகையாளா்கள் திரு பா விமல் குமார் மற்றும் திரு பா ஜெகதீஸ் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களும் மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் முன்னாள் மாணவ மாணவியா்களும் கலந்து கொண்டாா்கள் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்கள் தங்களது 78வது சுதந்திரத்தை எப்படி கிடைத்தது எப்படி இந்த சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் என்று பேசினார்கள் அது மட்டுமல்லாமல் பத்திரிகையாளர் திரு பா விமல் குமார் அவர்கள் மாணவ மாணவியா்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியரை மதிக்க வேண்டும் என சொற்பொழிவு ஆற்றினாா் அதுமட்டுமல்லாமல் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்களுக்கும் தலைமை ஆசிாியருக்கும் ஆசிாிய பெருமக்களுக்கும் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் கனி தரக்கூடிய மரக்கன்றுகளும் இனிப்புகளும் பத்திரிக்கையாளர் திரு பா விமல் குமார் மற்றும் திரு பா ஜெகதீஸ் அவா்கள் சார்பில் கொடுக்கப்பட்டது.