திருப்பூர் ரேஷன் அரிசி கடத்தும் முக்கிய புள்ளி பல்லடம் மாதபுரம் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார்!

தமிழகம் முழுவதும் தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று பலர் தொழில் செய்து வருகிறார்கள் இவர்கள் தங்களுக்குள் சிறு சிறு இடங்களை பிரித்துக் கொண்டு சிறிய அளவில் தொழில் செய்து வந்தார்கள் . ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் கட்சிப் பிரமுகர் என்று கூறிக்கொண்டு பல்லடம் ,மாதபுரம், புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் என்ற நபர் அரிசி கடத்தும் தொழிலை பிரமாண்டமாக விரிவுபடுத்தி பல லட்சம் வருவாய் வரும் தொழிலாக மாற்றியுள்ளார். 15 வயது முதல் 20 வயது உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அதிக பணம், போதை பொருள், உல்லாச வாழ்க்கை என கூறி இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்து அரிசி கடத்தலில் பயன்படுத்தி வருகிறார் . பல்லடம் கடைகோடி கிராமத்தில் தொடங்கி இன்று . திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி திருட்டை திமுக பிரதிநிதி என்று கூறி மிரட்டி இன்று வரை தமிழகம் முழுவதும் அரிசி கடத்தலில் முன்னிலை பெற்று வருகிறார் . திருப்பூரில் முக்கிய புள்ளியாக கொடிகட்டி பறந்து வருகிறார் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார். பல்வேறு வழக்குகள் வாங்கியும் , அதிகாரிகளுக்கு அஞ்சாமல் தனி ஒரு ரவுடியாக கெத்து காட்டி தொடர்ந்து தைரியமாக அரிசி கடத்தி தனி ஒரு சாம்ராஜ்யமாக செயல்பட்டு வரும் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் அப்பாவி இளைஞர்களையும் அதேபோல் ரவுடியாக முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மூளை செலவு செய்து அவர்களின் வாழ்க்க பலியாடாகி வருகிறார். தனி ஒரு மனிதனுக்கு சட்டம் வளைந்து கொடுப்பது ஏன்? காவல்துறையினர் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏழை பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படும் மானிய விலை அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் கெட்டுப்போன அரிசியை இருப்பு வைத்துக்கொண்டு அரிசி சரியில்லை என்று கூறி அடிமாட்டு விலைக்கு வாங்கி அரிசி கடத்தல் மன்னன் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் விற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் முழுவதும் சுமார் 50 இளைஞர்களுக்கு இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் நிரப்பி ,பணம் கொடுத்து ரேஷன் அரிசி கடத்தி வர அனுப்பப்படுகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. பணம் வாங்கும் ரேசன் கடை ஊழியர்களுக்கு பணம் கொடுத்தும், பணம் வாங்காத நபர்களை மிரட்டியும் ரேஷன் அரிசி வாங்கி வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தல் பற்றி பல்வேறு வழக்குகள் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் மீது இருந்தும் தொடர்ந்து கண்காணிக்காமல் கண் துடைப்புக்காக மாதம் தோறும் சில வழக்கு பதிவு செய்து அத்தோடு தனது கடமை முடிந்ததாக காவல்துறை செயல்படுகிறதா? அல்லது புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் அஞ்சு விட்டு விடுகிறார்கள் என்று தெரியவில்லை. ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார் பற்றி யாரேனும் தகவல் கொடுத்தால் கும்பலாக அவர்கள் வீடு தேடிச்சென்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுவார் ,சில நேரம் கை கலப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் புகார் கொடுக்க அனைவரும் அச்சப்படுகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உள்ளது மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு பகுதிக்கு அதிக விலைக்கு கைமாற்றம் புத்திரச்சல் ரைஸ் மில் விஜயகுமார், ஆத்துபாளையம் மருதுராஜ். சதீஷ் ,காமாட்சி, மங்கலம் பத்மநாபன்,விமல், சங்கர்,அருள்முருகன், இந்து அமைப்பு சுகுமார் , நடேசன், தாராபுரம் ரவி ,காங்கேயம் ரவி வெள்ளகோவில் தங்க ராஜ் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் மீது மீது புட் செல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.