தேனியில் ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்!

ஹோமியோபதி மருத்துவத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாணவர்களிடம் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பேசினார். தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் தேனி மாவட்ட ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஹோமியோபதி சங்க நிர்வாகிகள் பல்வேறு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவன கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார் அப்போது ஓமியோபதி மருத்துவ முறை இன்னும் மக்களிடையே சென்று விழிப்புணர்வு பெற வேண்டும் அப்போதுதான் மக்கள் ஹோமியோபதி சிகிச்சை குறித்து தெரிந்து கொள்வார்கள் என பேசினார். பின்னர் ஹோமியோபதி மருத்துவ சங்கங்களின் நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹோமியோபதி மருத்துவ அலுவலர் நியமிக்க வேண்டும் என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதிக்கு என்று தனி மருத்துவ பிரிவு தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தேனி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.