தேனியில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது!

தேனியில் செயல்பட்டுவரும் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதே போல இராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவித்தனர். மேலும் சாதனையாளர், எழுத்தாளர்கள், சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.