மதுரை பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக விழா!

மதுரை பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக விழா! கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பங்கு பெறாதது ஏனோ? மதுரை பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுக விழா மதுரை சமூக அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழச்சியை பீப்பிள் பிளஸ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் ஜான், மதுரை உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கு.சாமிதுரை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கல்வியாளர் டி.வி. தர்மர் சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் என்.ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். மதுரை பாராளுமன்ற வேட்பாளர்கள் ராம சீனிவாசன்( பிஜேபி), டாக்டர் சரவணன் (அதிமுக) மோ. சத்யா தேவி ( நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில் பீப்பிள் பிளஸ் மாத இதழ் சார்பாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேட்பாளர்களிடம் கேள்வியை கேட்டனர். நீங்கள் மதுரை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மதுரைக்கு எவ்வாறு என்னென்ன திட்டங்கள் செய்வீர்கள்? என்று ஒவ்வொரு மாணவ மாணவியரும் தனிப்பட்ட முறையில் தனித்தனியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு வேட்பாளர்கள் தனித்தனியாக பதில் அளித்தனர். இப்படி பீப்பிள் பிளஸ் மாத இதழ் சார்பாக மதுரை பாராளுமன்ற வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். எனினும் கடந்த 5 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சு.வெங்கடேசன் தேர்தல் வேலைப்பளு காரணமாக பங்குபெற வில்லையா? கடந்த 5 ஆண்டுகள் கிடைத்த நல் வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டீர்களா?என்பதுபோன்ற கேள்விகள் எழும்பினால்பதில்கூற இயலாது என்பதால் கலந்துகொள்ளவில்லையா? என பல்வேறு யூகங்கள் நமக்கு கிளம்பின. ஆனாலும் இந்தக் கூட்டத்தில் பங்குபெற சு.வெங்கடேசன் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவர் தேர்தல் வேலையாக வெகு தொலைவில் இருந்தார் என நிகழ்ச்சி தொடர்புடைய சிலர் கனிவுடன் தன்னிலை விளக்கம் அளித்தனர். முடிவில் நிர்வாக ஆசிரியர் வழக்கறிஞர் செ. மாரிச்செல்வம் நன்றி  கூறினார் ...