மேட்டுப்பாளையத்தில் பொழுது போக்கு அம்சங்களுடன் களை கட்டி வரும் லண்டன் பாலம் பொருட்காட்சி!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய லண்டன் பாலம் பொருட்காட்சி பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது. பொருட்காட்சியை காண அலைமோதும் மக்கள் கூட்டம். மேட்டுப்பாளையம் கோவை ரோட்டில் சிடிசி டிப்போ அருகே உள்ள தனியார் மைதானத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி பொருட்காட்சி தொடங்கியது. இதனை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திறந்து வைத்தனர் வருகின்ற 29 ம் தேதி வரை நடைபெறுகின்ற இந்த பொருட்காட்சி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது இந்தப் பொருட்காட்சியில் துழைவுக் கட்டணமாக ரூபாய் 50 வசூல் செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்தப் லண்டன் பாலம் பொருட்காட்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது துழைவுக் கட்டணம் தவிர பொருட்காட்சி அரங்கத்திற்கு உள்ளே மிகப்பிரமாண்டமான ராட்டினம் டிராகன்ஷிப் கப்பன் சாசர் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கேளிக்கை விளையாட்டுகளும்பம்பாய் அப்பளம் மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட வகை வகையான உணவு அரங்கங்களும் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய அனைத்து அரங்கங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு ‌பொழுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த பொருட்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தாருடன் தினசரி ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்து செல்கிறார்கள். இதுகுறித்து லண்டன் பாலம் பொருட்காட்சியை சுற்றிப் பார்த்த பொது மக்கள் கூறியதாவது கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது தான் மேட்டுப்பாளையத்தில் மேட்டுப்பாளையத்தில் சிடிசி டிப்போ அருகே லண்டன் பாலம் பொருட்காட்சி தொடங்கிய தகவல் வரவே குழந்தைகளுடன் அங்கு சென்றோம் கண்காட்சியின் துளைவு வாயிலில் லண்டன் பாலத்தின் யதார்த்தமான பிரதிபலிப்புக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, அதைத் தொடர்ந்து லண்டன் தெரு, லண்டனை ஒத்திருக்கிறது கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சம் லண்டன் தெரு மற்றும் ஜெய்ப்பூர் அரண்மனையின் நன்கு வடிவமைக்கப்பட்ட அச்சு அசலாக மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் குழந்தைகளின் பள்ளி விடுமுறையின் போது, ​​குடும்பத்தாருடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியாக குறிப்பாக முதியவர்களை இங்கு அழைத்துச் செல்வதால் அவர்கள் குழந்தைகளைப் போல மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று கூறியதுடன் அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது. இதுதவிர அங்கு இருந்த ஸ்டால்களில் மிக குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு எங்கள் குழந்தைகள் கூறி வருகின்றனர். அந்தளவுக்கு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் உள்ளது. கண்காட்சியில் உள்ள பொருட்களை ரசிக்கவும் மற்றும் குடும்பத்தாருடன் படம்பிடிக்க லண்டன் பாலம் பொருட்காட்சி குறைந்த செலவில் குடும்பத்தாருடன் சுற்றி பார்க்க சரியான இடமாக இருக்கிறது என்று கூறியதுடன் மீண்டும் ஒருமுறை சென்று வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.