திருப்பூர் செங்கப்பள்ளியில் நிருபருக்கு வைத்த குறி! சிக்கிய அப்பாவி சிறுவன்!! உண்மையான காரணத்தை மறைக்கும் காவல்துறை!!!

திருப்பூர் செங்கப்பள்ளி, கோவை = சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே, இந்தியன் பெட்ரோல் பங்க் பின்புறம் ராஜஸ்தான் தாபா என்ற பெயரில் செயல்படும் தாபா வழியில் எந்தவித பெயர் பலகையும் இன்றி, உரிய அனுமதி இன்றி எளிதில் தீ பற்றி எரியக்கூடிய கெமிக்கல் குடோன் ஒன்று செயல்படுகிறது . இந்த கெமிக்கல் எங்கிருந்து வாங்கப்படுவதில்லை. கொச்சின், தூத்துக்குடி பெங்களூர் ,சென்னை போன்ற பகுதிக்கு எடுத்து செல்லப்படும் டேங்கர் லாரியில் இருந்து திருடப்படுகிறது. திருடப்படும் கெமிக்கல் பெயிண்ட் மற்றும் பல்வேறு தொழிற்சாலைக்கு விற்கப்படுகிறது . இதனால் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பணம் லாபம் பார்த்து வந்த திருட்டு கும்பல் , சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் திருட்டு குறித்து கேள்வி எழுப்பிய பொழுது பத்திரிக்கையாளர் வீட்டுக்கு நேரில் சென்று எடுபுடி ரவுடிகள் தாங்கள் தமிழகத்தில் பெரிய சமுதாய ரவுடி ராஜா என்பவரின் வலது என்றும் என்றும். இந்த திருட்டு குறித்து தொடர்ந்து கிளறினால் உங்கள் மீது கீறி விடுவதாகும் மிரட்டி உள்ளார்கள். தொடர்ந்து திருட்டு குறித்து செய்தி எடுக்கும் நிருபர்கள் வருவார்கள் என்று கருதி. திருட்டு நடக்கும் இடத்தை சுற்றி எவ்வித அனுமதி இன்றி மின்வெளி அமைத்துள்ளார்கள். இந்த சூது குறித்து சிறிதும் எதிர்பார்க்காத அப்பாவி ஏழை சிறுவன் மின் கம்பி வேலியில் அடிபட்டு இறந்துள்ளான். இது நாள் அதிர்ச்சடைந்து துடித்த குடும்பத்தினரிடம் சில லட்சம் தருவதாக கூறி இறந்த உடலை சம்பவ இடத்திலிருந்து இருந்து பெருந்துறை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல காவல்துறையினர் உதவியுடன் செயல்பட்டு உள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு இறந்த சிறுவனின் உடலை திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வராமல், பெருந்துறைக்கு கொண்டு சென்றது ஏன் என ஒருபுறம் குடும்பத்தினர் கேள்வி எழுப்பினாலும். உடல் கூறு ஆய்வு முடிந்த சில லட்சம் பேரம் பேசிய கும்பல் கடைசி வரை பெருந்துறை மருத்துவமனைக்கு வரவே இல்லை. மின்வேளியில் அடிபட்டு இறந்த சிறுவனின் உடலை சம்பவ இடத்தில் இருந்து எடுக்கும் வரைக்கும் சில லட்சம் ஆசை கட்டிய திருட்டு கும்பல் . திடீரென எஸ்கேப் ஆனதால் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள் . நிரூபருக்கு வைத்த மின்வெளி அப்பாவி சிறுவனின் உயிரை குடித்தது அந்த குடும்பத்தினர் அறியவில்லை. திருட்டு குறித்து கடந்த இரண்டு மாதமாக தீயணைப்புத்துறை, இந்தியன் ஆயில் அதிகாரிகள், ஊத்துக்குளி காவல்துறை, ஃபுட்ஸ் செல் என பல்வேறு துறையிலும் புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமுதாய ரவுடிக்கு பயந்தா அல்லது மாதம் மாமுல் காரணமா என தெரியவில்லை. செய்தி வெளியிடும் நிருபருக்கு வைத்த மின் வேளியில். அப்பாவி சிறுவன் உயிரை குடித்தது வேதனையாக ஒருபுறம் உள்ளது. எனினும் இதே கும்பல் நிருபரை பல்வேறு விதமாக கொலையும் செய்ய துணிவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. காரணம் திருட்டு கெமிக்கல் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம். அத்த கோடிக்கணக்கான பணத்தை இலட்சக்காக ஊழல் அதிகாரிகள் எலும்புத் துண்டாக எரிந்துவிட்டு சர்வ சாதாரணமாக தைரியமாக கெமிக்கல் திருடி வருகிறார்கள். உண்மை சம்பவத்தை வெளியில் கொண்டு வரும் சமூகத்தின் நான்காவது தூண் ஆன பத்திரிகையாளரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது இன்னும் எத்தனை உயிர் போகும் வரை இந்த திருட்டு கும்பலால் சமுதாய ரவுடி பெயரைச் சொல்லி வலம் வரும் என தெரியவில்லை. அதிகாரிக்கு வழங்கும் லஞ்ச பணத்தால் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்பது உறுதி ஆகி உள்ளது. திருட்டு கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்குமா ஊத்துக்குளி காவல்துறை,என எதிர்பார்ப்பில் பத்திரிகை துறையினர்.