கீழக்கரையில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்!!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மஹ்தூமியா உயர்நிலை பள்ளி வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழக்கரை நகராட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வருகை புரிந்தவர்களுக்கு நகராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு நல மருத்துவம், முடநீக்கியல் மருத்துவம், பொது நல மருத்துவம், தோல் சிகிச்சை மருத்துவம், கண் பரிசோதனை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய மருத்துவம் சம்பந்தமான மருத்துவர்கள் பொதுமக்களுக்கு நோய்கள் பற்றிய ஆலோசனைகள் வழங்கினர். மேலும் தொற்று நோய்க்கான இரத்தம், சிறுநீர், சளி பரிசோதனைகள், இசிஜி, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார், தலைமை நில அளவர் சொக்கநாதன், திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, து.தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர்கள், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், மஹ்தூமியா உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு பார்வையிட்டு பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், கீழக்கரை நகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர். மஹ்தூமியா உயர்நிலை பள்ளியின் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் உதவி புரிந்தனர். முகாமில் கீழக்கரை பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.