பவானிசாகர் அருகே கடையை உடைத்து 18 பவுன் நகை, மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேர் கைது!!!
பவானிசாகர் அருகே கடையை உடைத்து 18 பவுன் நகை, மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேர் கைது!!!
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் இளங்கோ 53, பட்டு சேலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 3-ம் தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் கதவை உடைத்து கடையில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் வியாபாரம் செய்ய வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை கடையை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்று விட்டதாக பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3தனி படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.இன்று மேட்டு பாளையம் பகுதியில் வாகன சோதனையில் சந்தேக படும் படியாக காரில் வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்ததில் மாதம்பட்டியை சேர்ந்த சரவணன் (எ )ATM சரவணன்,35,-(50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது) கோவை மாவட்டம்,கணபதியை சேர்ந்த ஹரிபிரசாத், 27, 5 அடிதடி வழக்குகள் உள்ளது)
புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்த
கார்த்தி,31, ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திருடியதை ஒப்பு கொண்டனர். மூன்று பேரையும் கைது செய்து திருடிய 18 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை மீட்ட னர்.
அதில் திருடியதில் 50000 பணத்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தனர். 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.