ஆண்டிபட்டி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக தவித்து வந்த குட்டி நாய்!!!

ஆண்டிபட்டி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக தவித்து வந்த குட்டி நாய் ஒன்றை- கயிறு கட்டி இறங்கி பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மூன்று நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த குட்டி நாய் ஒன்று தொலைந்துபோனது பல இடங்களில் ஜெயராமன் தேடியும் குட்டி நாய் கிடைக்காத நிலையில் அருகே உள்ள 100 அடி ஆழம் கொண்ட தண்ணீர் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து குட்டி நாய் உயிருக்கு போராடி வந்தது தெரியவந்தது இதையடுத்து ஜெயராமன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி தீயணைப்புத்துறை இணை அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் கயிறு கட்டி உள்ளே இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டி நாயை பத்திரமாக மீட்டனர். மீட்டு உடனடியாக குட்டி நாய்க்கு பிஸ்கட் வழங்கி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மூன்று நாட்களாக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்த குட்டி நாயை கயிறு கட்டி உள்ளே இறங்கி பத்திரமாக மீட்டு வந்த தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.