திருப்பூர் மாநகராட்சி அடிப்படை வசதி இன்றி தவிக்கும் 1 வது வார்டு மக்கள்!

திருப்பூர் மாநகராட்சி அடிப்படை வசதி இன்றி தவிக்கும் 1 வது வார்டு மக்கள் குட்டையாக தேங்கி கிடைக்கும் மழை நீர் நோய் பரவும் அபாயம் திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது வார்டு பிரியங்கா நகரில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் அன்றாடம் அவதிப்படுவதாக கண்ணீர் மல்க கூறுகிறார்கள். மழைக்காலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் தொற்று பரவும் என்ற அச்சத்தில் உள்ளார்கள். கவுன்சிலரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித பலனும் இல்லை. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கூறுவதாக கூறப்படுகிறது மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் மாற்றான் தாய் மனப்பான்மையில் திருப்பூர் மாநகராட்சி செயல்படுகிறதா என்று அப்பகுதி வாக்காளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள், மேலும் வருகின்ற தேர்தலில் எந்த சாதனையை சொல்லி வாக்கு கேட்டு வருவார்கள் என கேள்வி எழுப்பினார்கள்.