தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!!!
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!!!
முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏ .பி.ஜே .அப்துல் கலாம் நினைவு தினத்தை போற்றும் வகையில் உறவின் முறை தலைவர் ராஜமோகன் ரிப்பன் வெட்டி கண்காட்சியினை துவக்கி வைத்தார்.உப தலைவர் கணேசன் பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர் பால சரவணகுமார், இணைச்செயலாளர்கள் வன்னிய ராஜன் அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.கண்காட்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சி பார்வையிட்டார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் கலந்து கொண்டார். இந்த அறிவியல் கண்காட்சியில் 800 மாணவ,மாணவர்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை ஊக்குவிக்கும் முறையில் ஒவ்வொரு மாணவிகளும் ,மாணவர்களும் அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.இந்த அறிவியல் கண்காட்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ,துணை முதல்வர்கள், ஆசிரிய,ஆசிரியைகள் இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிற பள்ளி மாணவ மாணவியர்கள்,ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டனர்.