திருப்பூர் பாண்டியன் நகர் டாஸ்மார்க் ஊழியர்களின் பிடிவாதம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் தர வேண்டும்!!!

திருப்பூர் பிஎன் ரோடு பாண்டியன் நகரில் செயல்படும் அரசு மதுபான கடை எண் 2310 மதுபானங்கள் வாங்கும் மதுப்பிரியளிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று அடாவடியாக வசூல் செய்து வருகிறார்கள். பணம் ஏன் தர வேண்டும் என்று எழுப்பும் வாடிக்கையாளர்களிடம் மதுபான பாட்டில்கள் எடுக்கும் பொழுது உடைந்தால் அதற்கான இழப்பீடு நாங்கள் கையில் இருந்தா போட முடியும் என்று திமிராக பதில் கூறுகிறார்கள் . பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கினால் நடவடிக்கை எடுப்போம் என்று டாஸ்மார்க் நிர்வாகமும், அமைச்சரும் கூறியும் டாஸ்மார்க் ஊழியர்களின் அடாவடியாக நடக்கும் நிலையை தொடர்கிறது காரணம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் மதுபாட்டில் விற்றால் பத்தாயிரம் ரூபாய் துளையாக கிடைக்கிறது .இந்த பத்தாயிரம் ரூபாயில் சதவீதம் வாரியாக பிரித்து அதிகாரிகள், அமைச்சர்கள் வரை செல்வதால் இது போன்ற அடாவடி டாஸ்மாக் ஊழியர்களை எதுவும் செய்ய முடியவில்லை என்பது எதார்த்தமான உண்மை. இதுபோன்று மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கேட்கும் பொழுது. அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் அவ்வாபோது வாக்குவாதமும், சில நேரங்களில் கைகலப்பும் நடைபெற்று வருகிறது டாஸ்மார்க் ஊழியர்களின் அடாவடி நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்பதை மது பிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.