திருப்பூர் எம் எஸ் நகரில் ஸ்ரீ உதயம் புக் ஸ்டோரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் அமோக விற்பனை காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர் எம் எஸ் நகரில் ஸ்ரீ உதயம் புக் ஸ்டோரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் அமோக விற்பனை காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. திருப்பூர் எம் எஸ் நகர் ஒன்றாவது வீதி நால் ரோட்டில் ஸ்ரீ சபரி ஐயங்கார் பேக்கரி இயங்கி வருகிறது. இப் பேக்கரியின் அருகில் உள்ள உதயம் புக் ஸ்டோரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் ஸ்கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதயம் மளிகை கடை and புக் ஸ்டோர் என்ற பெயர் பலகையை வைத்து குட்கா ஹான்ஸ் விமல் ஸ்கூல் லிப் போதைப் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பல்வேறு இடங்களில் மட்டுமில்லாமல் புக் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை துரிதமாக செயல்பட்டு குட்கா பொருட்கள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.