ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் அன்னூர் பத்திரப்பதிவாளர் பாலமுருகன்! விவசாயிகள் கொந்தளிப்பு!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய அன்னூர் பத்திரப்பதிவாளர் பாலமுருகன் மறுத்திருக்கிறார். எதற்காக மறுக்கிறீர்கள் என்று கேட்ட விவசாயிகளிடம் மேலிடத்திலிருந்து உத்தரவு என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நாளாக ஒரே பதிலை கூறியிருக்கிறார். இதைக் கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி மக்கள் ஒன்று திரண்டு அன்னூர் பத்திரப்பதிவாளர் அலுவலகம் முன்பு யார் அந்த மேலிடம் என்று கேள்வி எழுப்பினர். அந்த மேலிடம் யார் என்று சொல்ல முடியாமல் திருத்திருவென முழித்த பதிவாளர், பத்திரப்பதிவு செய்து தருகிறேன் என்று கூறினார். இதே அதிகாரி லஞ்ச பணத்திற்காக பத்திரத்தை ஒப்படைக்காமல் ஆறு மாத காலமாக இழுத்தடித்ததை நாம் அறிவோம். புளியம்பட்டியிலும் பத்திரப்பதிவு செய்வதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள் என்று விவசாயி புலம்பியதையும் நம் விண் எக்ஸ்பிரஸில் வெளியிட்டு இருந்தோம். தொடர்ந்து பல மாவட்டங்களிலும் சார்பதிவாளர்கள் மீது அதிரடி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டும், சில பதிவாளர்கள் லஞ்சத்தில் ஊறியே இருக்கின்றனர். குறிப்பாக தொண்டாமுத்தூர் பதிவாளர் இதுபோன்ற சம்பவங்களுக்காக பல இடங்களில் இடம் மாற்றப்பட்டும் திருந்திய பாடு இல்லை என்று அப்பகுதியில் பலர் கூறுகிறார்கள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக விவசாய மக்களை மதிக்காமல், தாங்கள் அரசு அதிகாரிகள் என்பதையே மறந்து விட்டதுதான் நிதர்சனமான உண்மை. விஜிலன்சை விலைக்கு வாங்கிய பதிவாளர்களும் கோவை மாவட்டத்தில் உள்ளனர் என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது. இது குறித்தான விரிவான செய்திகளை பவர் நியூஸ் இதழில் காணலாம். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்க்கும் உயர் அதிகாரியும் அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.