தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பஞ்சாயத்து கிராமப் பகுதியில் புதிதாக அமைய உள்ள தமிழ்நாடு அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு

தாராபுரம் அடுத்த குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூரியநல்லூர் பஞ்சாயத்து கிராமப் பகுதியில் புதிதாக அமைய உள்ள தமிழ்நாடு அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் 1000 த்துக்கும்மேற்பட்டவர்கள் சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சூரியநல்லூர் பஞ்சாயத்து கிராமப் பகுதியில் புதிதாக அமைய உள்ள தமிழ்நாடு அரசு மதுபான கடையை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சுமார் 1000 த்துக்கு மேற்பட்டவர்கள் தாராபுரம் கோவை புறவழி சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் தகவல் அறிந்த வந்த போலீசார் மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன், தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்ற் வழியில் தாராபுரம் காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஈடுப ட்ட சாலை மறியல் போராட்டம் பின்னர் தாராபுரம் தாசில்தார் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது இந்த கடை பைபாஸ் சாலையில் அமையாது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.