சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள எம். எஸ். பவுண்டேஷன் கீழ் இயங்கும் முக்தி செயற்கை மூட்டு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதா பவன் ஓட்டலில் நடைபெற்றது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது வெறும் கனவாக உள்ள சூழ்நிலையில் உழைக்கத் தயாராக இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் பலரின் கவன ஈர்ப்பை பெற்றது. சுமார் 200 பேர் வரை இந்த வேலை மூலம் பயன்பெற்றுள்ளனர் என்று முக்தி எம். எஸ். தத்தா சவுண்டேசன்மேலாண்மை இயக்குனர் மீனா தத்தா நம்மிடையே தெரிவித்தார். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வெகு திரளாக மாற்றுத்திறனாளிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்கள் தம் கல்வித் தகுதி தேவைப்படும் பணி ஆகியவற்றை பதிவு செய்தனர். வேலை வாய்ப்பு முகாமை மகேந்திர தத்தா, சதாப்தி மற்றும் மிதா ஆகியோர் சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்.