கோடாங்கிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் 97 நபர்களுக்கு வீட்டடி மனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு.

கோடாங்கிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் 97 நபர்களுக்கு வீட்டடி மனை பட்டா இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 1994-ம் வருடம் ஆதி திராவிட நலத்துறையால் புல எண். 459/2A-ல் 3 ஏக்கர் 60 செண்ட் நிலத்தினை அரசால் கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு நில உரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நுழையவிடாமல் சில இஸ்லாமிய அமைப்புகள், சம்பந்தமில்லாத நபர்கள் இடையூறு ஏற்படுத்தி கொலை மிலட்டலும் விடுத்தனர். மேலும் 97 நபர்களை குடியிருக்க விடாமல் குடிசைகளை தீ வைத்து எரித்து விட்டனர். மேலும் குடியேற முயற்சி செய்த போது குண்டர்களை வைத்து அடித்து விரட்டுகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறையால் 97 நபர்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை சான்றின் அடிப்படையில் குடியேற ஆவண செய்திட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.