சென்னை இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் திருவான்மியூர் கிளை திறப்பு விழா!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் ப்ரோமெட் மருத்துவமனை எதிரில் இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் திருவான்மியூர் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் டெல்லியைச் சேர்ந்த செயல் தலைவர் ஹேமந்த் தம்தா, திருச்சூரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலக துணைத் தலைவர் பால் ஜாய் போலேஹரன், சென்னை வட்டார துணைத் தலைவர் முத்து வள்ளியப்பன் கதிரேசன், தமிழ்நாடு பிரிவு குழு துணை தலைவர் சுமி ராமன், சென்னை குழு தலைவர் ஞான ஸ்டாலின் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தணிக்கை ஆலோசகர் எஸ். வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்தினர். இசாப் ஸ்மால் பைனான்ஸ்வங்கியின் திருவான்மியூர் கிளை மேலாளர் ராஜேஷ் மற்றும் வங்கி கட்டிட உரிமையாளர் பிரபு உள்ளிட்ட வங்கியின் கிளை நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களில் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.