ஓம் நிருத்யேக்ஷ்த்ரா நடனப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வனிகா நாட்டிய அரங்கேற்றம்

மேலைநாட்டு மோகத்தால் இந்திய பாரம்பரிய கலைகளின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும் பரதநாட்டியக் கலையை உயர்த்திப் பிடிக்க பலரும் உள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் பெசன்ட் நகர் ஓம் நிருத்யேக்ஷ்த்ரா நடனப் பள்ளியில் பயின்ற எஸ்.ஸ்வானிகாவின் பரத நாட்டிய அரங்கேற்றநிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்வானிகாவின் தந்தை விவேக், தாய் சர்மிளா மற்றும் பிரேம் ஆகியோர் சிறப்புடன் செய்து இருந்தனர். நடன பள்ளி ஆசிரியர் பாக்கிய ஸ்ரீ சதீஷ் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை அரங்கம் நிறைந்த ரசிகர்கள் வெகுவாக கண்டுகளித்து பாராட்டினர்.