சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சென்னை மயிலாப்பூர் சிதம்பர சுவாமி இரண்டாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவாசகப் பித்தர் தவத்திரு வாதவூரடிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அருள் ஆசி வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமோதரன், வினோத் மற்றும் குமரவேல் உள்ளிட்ட ஸ்ரீ சக்தி விநாயகர் விழா குழுவினர்கள் மற்றும் திருமயிலை ஸ்ரீ ஐயப்ப அபிஷேக ஆராதனை விழா குழுவினர்கள் சிறப்புடன் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருள் வேண்டி வணங்கினர்.