காங்கேயம் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை மதுப்பிரியர்களின் அடாவடி மாணவிகள்,பெண்கள் நடமாட அச்சம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் நிலையம் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடை அப்பகுதி பொதுமக்களின் பல்வேறு போராட்டம், எதிர்ப்புக்கு இடையே அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரிய தொகை கொடுத்து விட்டு தொடர்ந்து டாஸ்மாக் கடை செயல் பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை ஊரின் மைய பகுதியில் உள்ளது இதன் அருகே காங்கேயம் பஸ் நிலையம் ,அரசு மருத்துவமனை ,வணிக வளாகங்கள் உள்ளது. விவசாயம் மற்றும் கூலித்தொழில் வேலை காரணமாக 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உண்டு. ஆனால் இந்த டாஸ்மாக் கடையை தாண்டி செல்ல மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் ஆண்களே செல்ல அச்ச படுவார்கள் குடிமகன்கள் அசிங்கமா அசிங்கமாக பேசிக்கொண்டு அரைகுறை ஆடைகளுடன் சர்வ சாதாரணமாக நடமாடுவதும், அவர்களுக்குள் அடித்துக் கொள்வதும். ரோட்டில் செல்லும் பொதுமக்களை கேலி ,கிண்டல் செய்வதும் அன்றாடம் நடைபெறுகிறது. மேலும் இந்த டாஸ்மாக் பார் பஸ் நிலையம் அருகே இருப்பதால் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் ஆகிய பகுதிகளில் . குற்ற செயலில் ஈடுபடும் கிரிமினல்கள் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. கிரிமினல்கள் மது அருந்தி விட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது.பணம் தரவில்லை என்றால் தாக்கி விட்டு செல்வது போன்ற செயல்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இங்கு மதுபானம் விற்பனை 24 மணி நேரமும் தாரளமாக பலமடங்கு விலையில் தாராளமாக கிடைக்கும். இதுபோன்று நாள்தோறும் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் கூறும் அந்த பகுதியினர் மது விற்பனை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மதுபான பாரில் 24 மணி நேரமும் மது அருந்தும் இளைய சமுதாயமான இளைஞர்களின் எதிர்கால மிகவும் கேள்விக்குறியாகி வருவதாகவும் , தொழிலாளி நிறைந்த பகுதியில் மதுபான கடையை கண்டவுடன் வாங்கும் சம்பளத்தை முழுவதையும் டாஸ்மாக் கடையில் குடித்து செல்லும் குடிமகனால் குடும்பங்கள் நிதிநிலையல் பாதிக்கப்பட்டு வறுமையில் தள்ளாடுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காங்கேயம் காவல் நிலையத்திலும், காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர், தாராபுரம் மதுவிலக்கு போலீசாரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். அரசு டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில். மது போதைக்கு அடிமை ஆகி எத்தனை உயிர் போகுமோ என்று அச்சம் குடிமகனிடம் ஒருபுறம் இருந்தாலும், தாராளமாக கிடைக்கும் மதுவை போதைக்காக வாங்கி செல்லும் அவல நிலை உள்ளது. அப்பாவி மக்கள் அதிக விலை கொடுத்து மது அருந்தி தங்களது உடல் நிலையைக் கெடுத்தும். வருமானம் இன்றி குடும்ப சூழ்நிலை தள்ளாடுவதும். தற்கொலை நிலைக்கு செல்வதும். இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை இதனால் கேள்விக்குறி ஆகி வருவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளுமா? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களம் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.