சத்தியமங்கலம் வனபகுதியில் கடும் வறட்சி -தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள்
சத்தியமங்கலம் வனபகுதியில் கடும் வறட்சி -தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் படை எடுக்கிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி செல்லும் வழியில் சாலை ஓரம் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மான்கள் பள்ளத்தில் உள்ள குட்டையில் தண்ணீர் குடித்து வருகின்றன. குரங்கு களும் ஊருக்குள் உணவு, தண்ணீர் தேடி அலை மோதுகிறது.வனத் துறையினர் வனப்பகுதி குட்டை களில் தண்ணீர் நிரப்பி வன விலங்குகளின் தாகத்தை தணிக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.