ஆண்டிபட்டி அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்களாக இரவு நேர போட்டிகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் , கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 32 அணிகள் மொத்தம் பங்கேற்றன. இறுதி போட்டியில் திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கணவாய் தென்றல் அணியும் அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சடையாண்டி பாய்ஸ் அணியும் விளையாடின இதில் 27 க்கு 19 என்ற புள்ளி கணக்கில் அணைக்கரைப்பட்டி அணியை வீழ்த்திய திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கணவாய் தென்றல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையை நாட்டாமை ராம்குமார். பி ஆர் கே பள்ளித்தாளாளர் கண்ணன். தொழிலதிபர்கள் அழகர் , ரவிச்சந்திரன் , கண்ணன் அரசு மருத்துவர் அன்புக்குமார் மற்றும் கார்த்திக் சர்க்கரை பாண்டி ஆகியோர்கள் வீரர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பணமும் விளையாடிய கபடி வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது. இதேபோல ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கனவாய் தென்றல் கபடி குழு , முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் திம்மரச நாயக்கனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.