மீஞ்சூர் டூ பொன்னேரி சாலையில் புதிய ஹெச்பி பெட்ரோல் பங்க்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் டு பொன்னேரி சாலையில் புதிய ஹெச்பி பெட்ரோல் பங்க்கினை இராகவேந்திரா ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர். இந்த பெட்ரோல் & டீசல் நிலையத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய வட்டார மேலாளர் சுரேஷ் திறந்து வைத்தார். தமிழகத்திலிருந்து ஆந்திராவை இணைக்கும் பிரதான சாலையான இந்தச் சாலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை வாய்ப்பு கூடுதலாகவே உள்ளது. அதனை நன்றாக உணர்ந்து சரியான இடத்தில் ராகவேந்திரா ஃபில்லிங் ஸ்டேஷன் நிறுவனத்தார் பெட்ரோல் பங்கினை ஆரம்பித்துள்ளனர். இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை கல்யாண் உள்ளிட்ட அலுவலகத்தினர் மிகச்சிறப்புடன் செய்திருந்தனர்.