காட்பாடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: கனரக வாகன ஓட்டுனர்களுடன் மல்லுக்கட்டும் போக்குவரத்து பிரிவு பெண் போலீஸ்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலத்தில் பொம்ம சமுத்திரம் என்ற இடத்திற்கு அருகில் மேம்பாலம் கட்டப்படுவதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய போக்குவரத்து ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போது காட்பாடியில் உள்ள வள்ளிமலை கூட்டுரோட்டில் தினமும் மூன்று ஷிப்டுகளாக பிரித்து மூன்று போலீசார் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் என போக்குவரத்து பிரிவில் அமர்த்தி அவர்களை பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர் போக்குவரத்து பிரிவு போலீசார். இந்நிலையில் அவர்கள் ஆந்திரப் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்களை வள்ளிமலை ரோடு வழியாக திருப்பி அனுப்பி அதை சேர்க்காடு சென்று ராணிப்பேட்டை வழியாக சென்னை செல்ல வழி வகுக்கின்றனர். அதேபோன்று மாநகரக்குள் வாகனங்கள் செல்லாத வகையில் காட்பாடி குடியாத்தம் சாலையில் வாகனங்களை திருப்பி விட்டு அவற்றை கே. வி. குப்பம் குடியாத்தம் வழியாக சென்று சேலம் மார்க்கம் மற்றும் பல்வேறு வழித்தடங்களில் செல்ல வழிவகை செய்கின்றனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் என்பது சொல்லொனா துயரத்தை காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனரக வாகன ஓட்டுனர்கள் போலீசார் அயர்ந்த நேரத்தில் நகருக்குள் புகுந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நேற்று வேகமாக வந்த ஒரு கனரக வாகனத்தை நிறுத்தி குடியாத்தம் செல்ல வலியுறுத்தும் காட்பாடி போக்குவரத்து பிரிவு பெண் போலீசார் அவருடன் மல்லுக்கட்டி சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்த வாகனத்தை திருப்பி குடியாத்தம் சாலையில் அனுப்பிய பிறகு போக்குவரத்து நெரிசல் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காட்பாடி பகுதியில் உள்ள பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு செல்வோர் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது அன்றாட நிகழ்வாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காட்பாடி பகுதி வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல்துறை இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வள்ளிமலை கூட்டுரோடு வழியாக அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.