மேட்டுப்பாளையத்தில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

மேட்டுப்பாளையத்தில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத் சார்பில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும் அதற்கு துணை போகும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிறுத்து நிறுத்து போரை தலையிடு தலையிடு உலக நாடுகளே யுத்தத்தை தவிர்ப்போம் மனிதநேயத்தை பேணுவோம் என்று கோஷம் எழுப்பினார்கள் பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், போர் விதிமுறைகளை மீறி மனிதாபிமானம் இல்லாமல் மருத்துவமனை, மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக கொத்தாக குண்டுகளை வீசி பொதுமக்களை கொள்ளும் இஸ்ரேலை கண்டித்து மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீனியம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நா, சபையும்,உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும், என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இஸ்ரேலை கண்டித்து, சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இஸ்ரேல் ,பாலஸ்தீன மக்கள் மீது தற்போது மனிதாபிமானம் அற்ற செயலை கட்டவிழ்த்துள்ளது, பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு, குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவுக்கு வழியில்லாமல் அவதியற்று வருகிறார்கள் எனவே, பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஐநா சபை இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து பாலஸ்தீன மக்களுக்கு முழு மனித உரிமைகளை வழங்க வேண்டும், மனித உயிர்களை அழித்து வரும் இந்த போரை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான சிறுவர், சிறுமிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து சிறுவர், சிறுமிகள் கையில் போரை நிறுத்து என்று பதாகைகளை ஏந்திக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்களது கண்டனத்தை குழந்தைகளும் பதிவு செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சி ஐடியு தொழில் சங்க பொறுப்பாளர் மனாசே சாமுவேல் தலைமைத்தாங்கினார் சி ஐ டி யு தொழில் சங்க பொறுப்பாளர்கள் காளீஸ்வரன், அப்துல் சமது, கனகாமணி, முகமது அலி ஜின்னா யாசர்,பஷீர், ஹபீபுல்லா, நெவ்ஷாத், குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ். கிருஷ்ணமூர்த்தி சி ஐ டி யு மாநில செயலாளர், சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் பாஷா, மற்றும் அப்துல் ரஹீம், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மாநிலச் செயலாளர் செந்தில்குமார், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த ஐக்கிய ஜமாத் தலைவர்.ஹாஜி,முகமது செரிப், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐஎம் தாலுகா செயலாளர் கனகராஜ், பி.எஸ்.என்.எல். மாவட்ட அமைப்பு செயலாளர். சந்திர சேகர், காரமடை நகராட்சி 1, வார்டு உறுப்பினர் பிரியா, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ராஜலட்சுமி, மெஹபுநிஷா மற்றும் ரிபையா மற்றும் சிஐடியு பொது தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் சித்திக், செந்தில்குமார் ரங்கநாதன், பதுருதீன் இதயத்துல்லா, அக்பர் அலி, மகாலிங்கம், அன்சாரி, சத்தியா, நிஜாமுதீன் ஆண்டவ கார்த்திக், குணசுந்தரி, மல்லிகா, பாத்திமா, சன்பீர், ஆனந்தன், சதாம் உசேன், சபீக் அகமது. ஆட்டோ முஸ்தபா, ஆட்டோ கனி உள்ளிட்ட தோழமை சங்கத்தினர் குடிநீர் வடிகால் வாரியம், டாஸ்மாக் சங்கம், மருதூர் சென்ட் தொழிற்சாலை சங்கம், எல், ஐ,சி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், இன்ஜினியரிங் சங்கம், மெக்கானிக் சங்கம், டீ வியாபாரிகள் சங்கம், சாலையோரம் வியாபாரிகள் சங்கம், மின் பொருள் பழுது நீக்குபவர் சங்கம், ஆகிய தோழமை சங்கத்தினர் பங்கு பெற்றனர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெகுஜன அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டுப்பாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மேற்பார்வையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் சங்க பொறுப்பாளர் கனகாமணி நன்றி கூறினார். Visit: https://winexpress.co.in/ https://www.youtube.com/c/WinExpressCovai #WINEXPRESS#COVAI#NEWS