கீழக்கரையில் பொதுமக்கள் - அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பில் இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் - அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பில் ஜனநாயக வழியில் பாலஸ்தீன் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்தும் அப்பாவி மக்களுக்கு எதிரான போரை நிறுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. ஹபீப் நெய்னா கிராத் ஓதி துவங்கி வைத்தார். முஹம்மது ஜலீல் தொகுத்து வழங்கினார். முகமது பரூஸ், பாசித் இல்யாஸ், சுல்தான் சிக்கந்தர், ஹமீது பைசல், நம்ம கடை பாரூக் ராஜா முஹம்மது ஆகியோர் கண்டன கோஷமிட்டனர். பிரபாகரன் பங்கு தந்தை ரெமி ஜியஸ், ஜஹாங்கீர் அரூஸி ஆலிம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். கீழக்கரை கதீப் புதுப்பள்ளிவாசல் மன்சூர் ஆலிம் நூரி சிறப்புரை ஆற்றினார். சமூக ஆர்வலர் அஜுகர் நன்றி கூறினார்.கீழக்கரையை சார்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.