தேனி அல்லிநகரம் அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட ஐந்து அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

தேனி அல்லிநகரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட ஐந்து அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது முன்னதாக கோயில் அருகே பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலையில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டு பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்து விமான கலசத்தை அடைந்தனர் பின்னர் ஒற்றைச் செப்பு விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் புனித கலசநீரை ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பின்னர் கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஐந்து அடி உயர நந்தி பகவானுக்கு வண்ணமலர் மாலைகளாலும், ருத்ராட்ச மாலைகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டினர் இதில் தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை கண்டு தரிசித்துச் சென்றனர்