கோபி தாலுகாவில் குன்றுகளை குறி வைக்கும் மண் மாபியா திமுக செல்வம், மீசை மாரிமுத்து மீண்டும் தலை தூக்கும் புதுக்கோட்டை டீம்!

ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் கெட்டிசெவியூர் கணபதி பாளையம் காலனி அருகே உள்ள சிறு சிறு குன்றுகளில் விவசாய நிலமாக மாற்றி தருவதாக பல ஆண்டுகளாக திமுக செல்வம் மண் திருடி வருகிறார். இதற்கு உடனடியாக தாசில்தார், வருவாய் அலுவலர் மற்றும் கெட்டிசெவியூர் கிராம நிர்வாக அதிகாரி உள்ளார்கள் . மண் கடத்த ட்ரிப் சீட் புதுக்கோட்டை டீம் மூலம் ஈரோடு கனிமவள துறையில் பெற்றுக்கொண்ட பல்வேறு பகுதிக்கு மண் கடத்தப்படுகிறது. மண் கடத்தல் மன்னன் மீசை மாரிமுத்து மூலம் டி.என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையம் பகுதியில் வனத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இடத்தில் பல அடி ஆழத்திற்கு தோண்டி ஆயிரக்கணக்கான மண் லோடு கடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கோபி சுற்று பகுதி வேளாண்மை நிறைந்த பகுதியாகும் , இந்த பகுதியில் பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினரை பயன்படுத்தி பல கோடி மதிப்பிலான கனிமங்கள் கடத்தி பல கோடி சம்பாதித்த நபர் தான் மண் கடத்தல் மன்னன் மீசை மாரிமுத்து ஆவார். கோபி, அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் பகுதிகளில் அனுமதி இன்றி அப்பகுதியில் உள்ள சிறு குன்றுகள் , குளம் குட்டைகள் மற்றும் விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் மண் கடத்தி, சாலை ஓர பகுதிகளில் கொட்டி பகல் நேரங்களில் பல்வேறு பகுதிக்கு மண் கடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் கனிம வள கொள்ளை, கிராவல் குவாரி ,கல்குவாரிகள் முறைகேடுகள் சம்பந்தமாக பல்வேறு புகார்கள் ஈரோடு கலெக்டர் மற்றும் கனிமவளத் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் குவிந்துள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோபி கல்குவாரியில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் கல் குவாரி உரிமையாளரை கைது செய்தும் . கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர்களை இடமாற்றம் மட்டும் செய்து கண் துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வேளாண்மை இடத்தில் மண் கடத்தும் கும்பலிடம் இருந்து அப்பாவி விவசாயிகளை காக்க , மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மண் கடத்து கும்பல் சற்று பயப்படுவார்கள், இல்லையென்றால் அதிக லாபம் என்பதால் ஒரு சில ஆண்டுகளிலே வேளாண்மை நிலைகளை பல அடி ஆழம் தோண்டி விவசாயம் செய்யும் முடியாத அளவிற்கு கொண்டு சென்று விடுவார்கள் என்பது யாதரத்தமான உண்மை. ஈரோடு மாவட்ட கோபி வருவாய் துறை அலுவலராக பொறுப்பேற்றுள்ள சிவானந்தம் ஐஏஎஸ் கடும் நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.