8 வது நாளாக‌ மீனவர்கள் மீன்பிடிக் செல்ல தடை பல கோடி ரூபாய் இழப்பு!!

இராமநாதபுரம் மிதிலி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பாம்பனில் 2 ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8 வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப் பட்ட தடையால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளன. ‌ புயல் சின்னம் வங்க கடலில் உருவாகி உள்ள மிதிலி புயல் சின்னத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் மண்டபம் பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த 13 - ம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனிடையே வங்க கடலில் உருவாகியுள்ள மிதிலி புயல் சின்னமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாம்பனில் 2 வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் 8- வது நாளாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது இதனால் 700 - க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி இழப்பு இதே போல் மண்டபம்‌ பாம்பன் தொண்டி ஏர்வாடி வாலிநோக்கம் மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2000 - க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 15.000- க்கும் மேற்பட்ட நாட்டு பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் அரசுக்கு பல கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதே போல் ஏராளமான மீனவ குடும்பங்கள் அதை சார்ந்த மீன் பிடி தொழிலாளர்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். செய்தியாளர் கார்மேகம்.

8 வது நாளாக‌ மீனவர்கள் மீன்பிடிக் செல்ல தடை பல கோடி ரூபாய் இழப்பு!!
8 வது நாளாக‌ மீனவர்கள் மீன்பிடிக் செல்ல தடை பல கோடி ரூபாய் இழப்பு!!