தேனியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பராமரித்து வந்த தந்தையிடம் இருந்து பிரித்து தாயிடம் ஒப்படைத்த போலீசார்.

தேனி அருகே அமச்சியாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வபிரபு(26) பெரியகுளம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வடபுதுபட்டி அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த முத்துலட்சுமி(26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வ பிரபு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் செல்வபிரபுவின் தாய் முருகேஸ்வரி பராமரிப்பில் குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செல்வபிரபுவுடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு முத்துலட்சுமி தனது குழந்தையை விட்டுவிட்டு தந்தையின் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் நரம்பு தொடர்பான சிகிச்சையை செல்வபிரபு குடும்பத்தினர் மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வ பிரபு மீது முத்துலட்சுமி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார் இது தொடர்பாக செல்வ பிரபு மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் முருகேஸ்வரியை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது ஆய்வாளர் மங்கையர் திலகம் மற்றும் சார்பு ஆய்வாளர் லதா ஆகியோர் முத்துலட்சுமி குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வ பிரபு தெரிவித்தார். மேலும் காவல் நிலையம் வெளியே குழந்தையுடன் காத்திருந்த தனது தாய் முருகேஸ்வரியை ஆபாசமாக பேசி தனது குழந்தையை பறித்து முத்துலட்சுமியிடம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தனது குழந்தையை மீண்டும் தனக்கு கொடுக்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் பணம் கேட்டு ஆய்வாளர் மிரட்டியதாக செல்வபிரபு குற்றச்சாட்டு தெரிவித்தார் அப்போது தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் குழந்தையை முத்துலட்சுமி இடம் கொடுத்து அனுப்பி வைத்ததாக புகார் தெரிவித்தார். இதுகுறித்து செல்வபிரபு கூறுகையில் தனது குழந்தையை 6 மாதாமாக மனைவி பார்க்கவில்லை என்றும் தனது குழந்தைக்கு உடல் நல பாதிப்பு உள்ளது, என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தான் தெரியும் என்றும் அவர்களிடம் குழந்தை இருந்தால் முறையாக வளர்க்க மாட்டார்கள் என்றும் தனது குழந்தையை மீட்டு தன்னிடம் மட்டும் சார்பு ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்வ பிரபு தனது தாய் தந்தையுடன் புகார் மனுவை அளித்தார்.