சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆற்றல் 2024 தேசிய இளம் மருத்துவர்கள் மாநாடு!

ஆற்றல்-2024 என்ற தலைப்பில் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் தேசிய இளம் மருத்துவர்களுக்கான மாநாட்டினை இந்திய மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை, இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு நூலக கருத்தரங்க வளாகத்தில் நடத்துகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை மற்றும் மருத்துவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜமுனா ராணி கூறியதாவது: இளம் மருத்துவ மாணவர்கள் முன் உள்ள துறை சார்பு சவால்கள், அதை எதிர் கொள்ளும் திறன் பற்றிய கருத்துரைகளை நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் விளக்க உரை நிகழ்த்துகின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள், மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களும் என சுமார் 1000 இளம் மருத்துவமாணவர்கள் பயனடைய உள்ளனர். வளர்ந்து வருகின்ற விஞ்ஞான வளர்ச்சிக்கே ற்ப நவீன மருத்துவ தொழில் நுட்பம் இருப்பினும் மருத்துவர்கள் மக்களை தேடிச்சென்று நோய் தீர்க்கும் சேவையின் அவசியத்தை உணர வைக்கிறோம். அதன் மூலம் மக்கள் சார்பு மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் என்றார். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மகளிர் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகிற மகளிர்க்கு பாதுகாப்பு அவசியம் வேண்டும். குறிப்பாக மருத்துவத்துறையில் மகளிருக்கென்று ஆண் சமுதாயத்தினர் மிகுந்த ஒத்துழைப்புடன் பணியாற்றுகின்றனர். எனினும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம் என தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் சேர்மன் டாக்டர் வி‌. எஸ். ஹரிகரன், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் தலைவர் அபுல்ஹாசன், செயலாளர் கார்த்திக் பிரபு, காமன்வெல்த் மருத்துவக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெயலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.