தேனி மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன வார விழா இன்று முதல் துவக்கம்.

தேனி மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன வார விழா இன்று முதல் துவக்கம். தேனி மாவட்டத்தில் உள்ள மின்சார துறை சார்பாக மின்சார சிக்கன வார விழா பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தாச்சி விநாயகர் கோவில் அருகே பேரணி துவங்கியது. இந்த பேரணியை தேனி மாவட்ட டிஎஸ்பி பார்த்திபன் துவக்கி வைத்தார். இந்த பேரணி தேனி முக்கிய நகர் வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பேரனின் போது மின்சார சிக்கனம் குறித்து பல்வேறு விளக்கங்கள் பொது மக்களுக்கு அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சார சிக்கன தேவை குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள மின்சார துறை சார்பாக மின்சார சிக்கன வார விழா பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தாச்சி விநாயகர் கோவில் அருகே பேரணி துவங்கியது இந்த பேரணி இன்று முதல் வரும் 20 தேதி வரை தேனி மாவட்டம் முழுவதும் நடைபெறும் என மின்சார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.