தேனியில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ஆயிரம் பனை விதைகளை நட்டு அசத்தியுள்ளனர்.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பனை மர விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பசுமை இயக்கம் சார்பில் மேற்கொண்ட இந்த முயற்சியில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தில் சுமார் 1000 பனை மர விதைகளை விதைக்க தொடங்கினர். கல்லூரி மாணவிகளை வரவழைத்து பனைமர விதைகளை கொடுத்து பனை மர விதைகளை விதைப்பதால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும், மண்ணின் நிலைத்தன்மையை பாதுகாக்கப்படும் என்று அதன் நன்மைகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தி பின் பனை மர விதைகளை விதைக்கும் பணியை தொடங்கினர் பனை மர விதைகளை கையில் எடுத்துக்கொண்டு ஆர்வமாக விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பசுமை உலகத்தை உருவாக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி மாணவிகள் சார்பில் 1000 பனை மர விதைகளை விதைக்கும் முயற்சியை மேற்கொண்டதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாகிகள், முதல்வர் பேராசிரியர்கள், பசுமை இயக்கத்தினர் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துக் கொண்டனர்.