மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் விற்பனை குழு தேர்தலில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல்!!!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் விற்பனை குழு தேர்தலில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் அதற்காக நகர விற்பனைக் குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது இதன்படி 848 சிறு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது மேலும் நகர விற்பனை குழு உறுப்பினர்களாக இவர்களின் ஆறு பேரை தேர்வு செய்ய மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் வருகின்ற 14.08.2024 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டிடும் வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை பெறுவதற்கு 26.07.2024 முதல் 02.08.2024 பெறப்படும் என மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU சாலையோர சிறு வியாபாரிகள் சங்க சார்பில் அப்துல் சமது. ஆனந்தி. கனகமணி ரங்கநாதன். யாசர் அராபத். சலீம் ஆகிய ஆறு பேர் 2000 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர் நடைபெறும் இந்தத் தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை வரும் 5 ம்தேதி நடைபெறும் வேட்பு மனு திரும்ப பெரும் நாள் மற்றும் இறுதிப்பட்டியல் வரும் 6 ம் தேதி வெளியிடப்படும் என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.