சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் அறக்கட்டளையின் சார்பில் சாந்தோம் மான்போர்ட் உள்விளையாட்டு அரங்கத்தில் முதலாவது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் அறக்கட்டளையின் சார்பில் சாந்தோம் மான்போர்ட் உள்விளையாட்டு அரங்கத்தில் முதலாவது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் முத்து பழனியப்பன், அக்வா ஸ்கிரீன் பிளஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் டாக்டர் சக்திவேல், கல்வியாளர் பேராசிரியர் சீனிவாசன், வழக்கறிஞர் உமையாள், சக்தி வாசு, TETA சென்னை மண்டல இயக்குனர் பி சேதுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிலம்ப போட்டிகளையும் நடத்தி பரிசுகளையும் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் அறக்கட்டளையின் தலைவர் ஏழுமலை மற்றும் பொதுச் செயலாளர் வின்னரசி ஏழுமலை ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.