சென்னை மாவட்ட சேனைத் தலைவர் சங்கம் சார்பில் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்!

சென்னை அசோக் நகர் லட்சுமி ஹாலில் சென்னை மாவட்ட சேனைத்தலைவர் சங்கம் சார்பில் 78 -வது சுதந்திர தின விழா, சங்கத்தின் 58வது ஆண்டு துவக்க விழா மற்றும் 26 வது குடும்ப விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாசன சங்க அறக்கட்டளை மாநில தலைவர் கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் எம். கே. எஸ். மாதன், மற்றும் சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் பழனிக் குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் விழா மலர் வெளியிடப்பட்டது. 2024 -ஆம் ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்பு சிபிஎஸ்ஈ., டி என் பி எஸ் இ பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன அறக்கட்டளை முன்னாள் தலைவர் அமரர் அக்ரி கே. எஸ். சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. எஸ். மாரிமுத்து தலைமை உரையாற்றினார். செயலாளர் நடராஜ் கணபதி வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் மா. வெங்கடேஷ் நிதி வளர்ச்சி குறித்த விளக்க உரையாற்றினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் வருகை புரிந்தோருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.