திருப்பூரில் அதிகாரிகள் கண்காணிப்பை மீறி கள்ளத்தனமாக பேக்கரியில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதை பொருட்கள் அமோக விற்பனை!

திருப்பூர் எம் எஸ் நகரில் இருந்து வாவிபாளையம் மற்றும் பொம்மநாயக்கன்பாளையம் போகும் வழியில் ராதா நகரில் சுதாகர் ஹோட்டல் அருகே உள்ள விஜயலட்சுமி பேக்கரியில் கடுகு அளவு கூட அச்சமே இல்லாமல் போதை பொருட்கள் அமோகமாக விற்கப்படுகிறது. பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் போதை பொருட்கள் பல்வேறு இடங்களில் மட்டுமில்லாமல் பேக்கரி களிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது இளைய சமுதாயமான பள்ளி மாணவர்களும் குட்கா போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் இடமாற்றம் செய்து பிறகு திருப்பூர் மாநகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் அதிரடி வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட கடையில் ,10 லட்சத்துக்கு மேற்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையும் மீறி குட்கா தொடர்ந்து தைரியமாக விற்பது எப்படி? உணவு பாதுகாப்புத் துறை உடன் காவல்துறையும் கண்காணித்தால் குட்கா, ஹான்ஸ் போதை பொருள் கட்டுப்படுத்தும் பணி எளிதாகும்.