சென்னை சேத்துப்பட்டில் ஆல்டாஸ் பிசியோ தெரபி சிகிச்சை மையம் திறப்பு விழா!

சென்னை சேத்துப்பட்டில் மித்தாய் ஷோரூம் அருகில் குப்புசாமி சாலையில் ஆல்டாஸ் பிசியோதெரபி சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது. மையத்தினை சாக்கு சித்தர் மற்றும் பங்குத் தந்தைகள் அன்பு ரோஸ், மைக்கேல் தாமஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். நல் மேய்ப்பன் மாத இதழ் ஆசிரியர் டாக்டர் டபிள்யு. சி.தாமஸின் புதல்வி டாக்டர் விண்ணி தாமஸை நிறுவனராகக் கொண்டு இந்த சிகிச்சை மையம் இயங்க உள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை ஐஜி ஆர். பெரியய்யா, புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி. விஜய் ஆகியோர் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினர். கோலாலம்பூர் சர்வதேச வர்த்தக சபையின் இந்திய தலைவர் செழியன் குமாரசாமி, கல்வித்துறை இணை இயக்குனர் ஆர். ஸ்வாமிநாதன், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் கவிஞர் சி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிவில் விமான பாதுகாப்பு பணியகத்தின் பொது இயக்குனர் சுகுணா சிங் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக குட் செப்பர்டு சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் எலிசபெத் தாமஸ், மதுவந்தி, பேராசிரியர் பி. தீபலட்சுமி, மஞ்சரி அலெக்சாண்டர், டாக்டர். விண்ணி தாமஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிறைவாக குட் செப்பர்டு சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவரும், நல் மேய்ப்பன் மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் டபிள்யூ .சி. தாமஸ் நன்றி உரையாற்றினார்.