சென்னையில் நடைபெற்ற வங்காள விரிகுடா திட்ட கலந்தாலோசனை கூட்டம்!

வங்காள விரிகுடா திட்டம் அரசுக்கு இடையேயான அமைப்பின் சார்பில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள உயர் கடல்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த பன்னாட்டு நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் உள்ள ட்ரைடன் ஓட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை, மியான்மர், பங்களாதேஷ், தாய்லாந்து, பூடான், கம்போடியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், தைமூர் தீவுகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து,ஷெசெல்ஸ், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மொரிசியஸ் உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்தும் கடல் சார்பு கருத்துரைஞர்கள், அறிஞர்கள் பங்குபெற்று தங்கள் தம் கருத்துகளை எடுத்துக் கூறி அலசி ஆராய்ந்தனர். இந்நிகழ்ச்சியினை வங்காள விரிகுடா திட்ட (பிஓபிபி) இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணன், பிஓபிபி நிர்வாகி வி. ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.