கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை வரதராஜபுரம் ஸ்ரீ சாய் விவாக திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த சிறப்பு பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் G.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ,PR நடராஜன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் N. குணசேகரன். முத்து கண்ணன்.K. காமராஜ், A. ராதிகா. கோவை மாவட்ட செயலாளர் C. பத்மநாபன்.CITU மாவட்ட தலைவர் மனோகரன் மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணமூர்த்தி. உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமான நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் நடைபெற்ற சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய இப்போது இருந்தே பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணியை அமோக வெற்றி இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட அனைவரும் இந்திய கூட்டணியை வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.