கடம்பூர் அருகே உடல் நல குறைவால் பாதிக்க பட்ட பெண் யானைக்கு வனத் துறையினர் சிகிச்சை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வன சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் பீட் கச்சம் பள்ளம் என்ற இடத்தில் வனத் துறை பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது யானை ஒன்று எழுந்திருக்க முடியாமல் படுத்து கிடந்தது. உடனடியாக வன கால் நடை மருத்துவர் மற்றும் வனத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல் நலம் பாதிக்க பட்ட 30 வயது பெண் யானைக்கு குளுக்கோஸ், ஊசி, ஏற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.