சென்னையில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான்!

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நீர்வள நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் துறை, இந்தியா பிளம்பிங் அசோசியேசன் ஆகியவை இணைந்து தண்ணீர் விழிப்புணர்வு விழாவை கொண்டாடும் விதமாக "நான் தண்ணீரை சேகரிக்கிறேன், ( ஐ சேவ் வாட்டர்) என்ற தலைப்பில் நீரத்தான் என்னும் மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி மைதானத்தில் துவங்கி அப்பள்ளியை ஒட்டிய வெளிப்புறச் சாலை, கடற்கரை சாலையில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றோருக்கு விருதுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்தியா பிளம்பிங் அசோசியேசனின் தேசிய செயற்குழு தலைவர்கள் ஜோசப் மாத்யூ, சிவபிரகாஷ், சேர்மன் எஸ். வீரப்பன், துணை சேர்மன் வி. பாலசுப்ரமணி, செயலாளர் ஜே. சங்கர், இணைச்செயலாளர் பி. மனோகர், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். பாலாஜி, துரைசிங்கம், சத்தியசீலன், சண்முகம் மற்றும் தியாகராஜன் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர். இந்த நீரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கே எஸ் பி பம்ப், ஸ்ரீராம் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நீரத்தான் நடைபெற தனது பங்களிப்பை சிறப்புடன் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.